முஸ்லிம் எம்.பிக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எம்.எஸ்.தௌபீக் கருத்து
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கமாட்டேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
"20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தொடர்ந்தும் பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்களா?" எனக் கேட்டு சமூக செயற்பட்டாளர் ஒருவர் பேஸ்புக் பதிவொன்றில் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், "தான் அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பின்னர் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு இவர் ஆதரவு வழங்கி வந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பினை மேற்கொண்ட இவர், நேற்று (06) புதன்கிழமை
இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அரச தரப்பு நாடாளுமன்ற
கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.