விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! நான் மீண்டும் வருவேன் - டயானாவின் சபதம்
மிக விரைவில் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதன் பின்னர் நான் மீண்டும் அரசியலுக்குள் வருவேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நான் மீண்டும் வருவேன்
தொடர்நதும் தெரிவிக்கையில்,
எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்திருந்தது.
அதேவேளை, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்றைய ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தனது விளக்கத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam