அதிகரிக்கும் வெப்பம் : யாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே நேற்றையதினம் (08.05.2024) உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார். அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri