குறுகிய நேரத்துக்குள் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Mahinda Yapa Abeywardena Sri Lanka
By Sivaa Mayuri Sep 09, 2022 07:33 AM GMT
Report

இலங்கையில் இன்று கூடிய நாடாளுமன்றம் குறுகிய நேரத்துக்குள் அமர்வை நிறுத்திக்கொண்டது.

இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமான அமர்வு சுமார் அரை மணித்தியாலமே இடம்பெற்றது.

இதன்போது மறைந்த பிரித்தானிய எலிசபெத் மகாராணிக்கு இலங்கையின் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Sri Lanka Parliament

பிரசன்னமாகாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

இன்று நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30க்கு ஆரம்பமான நிலையில், பிரதமர் தினேஸ் குணவர்த்தன இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எனினும் நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பிரசன்னமாகியிருக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியம்

குறுகிய நேரத்துக்குள் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வு | Parliament Of Sri Lanka Today

சுமார் 10 பேர் மாத்திரமே இன்று மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை கோரவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, தாம் இது தொடர்பில் இன்று மத்திய வங்கியின் ஆளுநருடன் பேசியதாக குறிப்பிட்டார்.

இந்த இணக்கத்தை சமர்ப்பிப்பதில் எவ்வித தடைகளும் இல்லை என்று தம்மிடம் குறிப்பிட்ட மத்திய வங்கியின் ஆளுநர், இதற்கு முன்னர் கூறப்படாத வரிகள் தொடர்பான உணர்திறன் விடயங்கள் இணக்கத்தில் அடங்கியிருப்பதால், இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவேண்டியது நிதியமைச்சராகும் என்று தெரிவித்ததாக சபாநாயகர் கூறினார்.

இதனையடுத்து கருத்துரைத்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்தில் வரி உணர்திறன் விடயங்கள் இருக்குமாயின் அவற்றை தவிர்த்து, ஏனைய இணக்கங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது பதில் வழங்கிய சபாநாயகர், தாம் இது தொடர்பில் நிதியமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக உறுதியளித்தார்.

தேசிய சபை தொடர்பான யோசனை

இந்தநிலையில் அண்மையில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளையின் இரங்கல் உரைக்காக இன்று அமர்வு கூட்டப்பட்டபோதிலும் தேசிய முக்கியத்துவம் கருதி, தேசிய சபையை அமைப்பதற்கான யோசனை தொடர்பிலான விவாதத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன கேட்டுக்கொண்டார்.

எனினும் தேசிய சபை தொடர்பான யோசனை இன்னும் நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்துக்கு வரவில்லை என்று சபாநாயகர் அறிவித்தமையை அடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US