நாடாளுமன்றத்தை தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்
நாடாளுமன்றம் வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் அதிகாரி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாடாளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா பகுதியில் கடற்படையின் படகுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் பொலிஸ் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக, முப்படைகளின் அதிகாரிகளும் தொடர்ந்தும் அனுப்பப்படவுள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடு, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
