ஏழு மூளை கொண்ட பூதம், மூன்று தலைக் கழுதைகள்! சபையில் ஒலித்த வார்த்தைகள்
அரச பொது நிறுவனங்கள் பற்றிய குழுவிற்கான (கோப்) உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் அரச எதிர்க்கட்சிகளிடையில் நாடாளுமன்றில் கடும் தர்க்கம் ஏற்பட்டதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அது மட்டுமன்றி எதிர்க்கட்சிகள் தமக்குள்ளும் முரண்பட்டுக் கொண்டதுடன் அரச தரப்பிலிருந்து வெளியேறி சுயாதீன எதிர்க்கட்சியாக செயற்படும் எம்.பிக்கள் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு நியமிக்கப்படவில்லையென்ற குற்றசாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
ஏழு மூளை கொண்ட பூதம், மூன்று தலைக் கழுதைகள், படிக்காத முட்டாள் போன்ற வார்த்தைப் பிரயோகங்களினால் சபை அரை மணிநேரம் அமளிதுமளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,