நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வரையறுக்கும் உத்தேச சட்டம் சமர்ப்பிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வரையறுக்கும் வகையிலான உத்தேச சட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் சட்டப் பிரேரணையாக இந்த வரைவுச் சட்ட மூலம் ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வரைவுச் சட்ட மூலம்
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கொள்கைகளுக்கு அமைவாக இந்த உத்தேச சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிறப்புரிமைகளை ரத்து செய்யக்கூடிய வகையில் புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விவாதம்
பத்தாம் நாடாளுமன்றின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் பிரேரணையாக இந்த உத்தேச சட்ட மூலம் குறித்து விவாதம் நடத்தப்படலாம் என ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்ட மூலம் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தி கூறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்தக் கட்சியின் கொள்கை எவ்வாறானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 13 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
