வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு - எத்தனை கோடிகள் கிடைக்கும் என மனோ எம்.பி கேள்வி

India Mano Ganesan Express Pearl Ship
By Mayuri Jul 03, 2021 10:03 AM GMT
Report

“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பல் மூலமான இரசாயன கழிவினால் இலங்கை கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி பாராட்டத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகளை ஆய்வு செய்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு தனது கடற்படை மூலம் உதவிகள் செய்து வருகின்றன.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நடுக்கடலில், இரசாயன பொருட்களை சுமந்தபடி எரிந்து கொண்டிருந்த “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலை, இலங்கை துறைமுகத்துக்கு, இலங்கை கடல் எல்லைக்குள் வர சொன்னவர் யார் என எவருக்கும் தெரியாது. அந்த அமைச்சர் அல்லது அதிகாரி யார் என மக்கள் கேட்கிறார்கள்.

அவரை கண்டால் வரச்சொல்லுங்கள். அவருக்கு சுவையான மீன் உணவு தர தாங்கள் தயார் என மீனவ மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இலங்கை கடல் வளம் அழிகிறது. மீனவர் வாழ்வு அழிகிறது. இலங்கை மக்களுக்கு உணவில் மீன் இன்று சந்தேக பொருள் ஆகி விட்டது.

இவற்றுக்கான நஷ்டஈட்டை “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” எப்போது தரும்? எத்தனை கோடிகள் கிடைக்கும்? அதில் எத்தனை இலட்சங்கள் மீனவர்களுக்கு கிடைக்கும்? இந்த கேள்விகளுக்கு விடைகள் இன்னமும் இல்லை. இலங்கை அரசு இவற்றுக்கு பதில் கூறாமல் ஒளிகிறது.

இதுவரை துறைமுக துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவோ, மீன்வள துறை அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவோ இது பற்றிய உண்மைமைகளை பேச மறுக்கின்றனர்.

பேரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கின்றனர். இந்த பின்னணியில் இந்திய அரசின் இந்த உதவி ஒரு ஆறுதல். “சாகர் ஆரக்ஸா” என்ற கடல் செயற்பாட்டின் மூலம் இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் குறிப்பிட்ட கப்பலின் தலைவர், மாலுமிகளுக்கு , இலங்கை மீனவர் சமூகம் சார்பாக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு, இலங்கை கடல் வளத்துக்கு, “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகள் மூலம் ஏற்பட்டது. இதனால் மேற்கு கரை முழுக்க மீனவ சமூகம் தொழில் இழந்து, வாழ்விழந்து, ஏறக்குறைய நடுத்தெருவுக்கு வந்துள்ளது.

அவர்களது ஆவேச குரல் இலங்கை அரசுக்கு கேட்கவில்லை. ஆனால், இந்திய அரசுக்கு கேட்டுள்ளது. ஒரு நட்பு நாட்டு அரசு என்ற முறையில், எங்கள் மீனவர் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய அரசு செய்துள்ள உதவிக்கு, இலங்கை மீனவர் சமூகம் சார்பாக நாம் நன்றி கூறுகின்றோம் என எம்பி கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US