நாடாளுமன்றம் திருட்டு கும்பல் வசமே இருக்கிறது: ஜேவிபி குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Ranil Wickremesinghe 21st Amendment
By Kanamirtha Jun 01, 2022 10:29 AM GMT
Report

”தற்போதும் நாட்டின் நாடாளுமன்றம் திருட்டு கும்பல் வசம் காணப்படுகின்ற நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்குத் திருடர் கூட்டம் தயாராகி வருவதாக” மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மகிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி 

நாடாளுமன்றம் திருட்டு கும்பல் வசமே இருக்கிறது: ஜேவிபி குற்றச்சாட்டு | Parliament Is In The Hands Of A Robbery Gang

''அலிபாவா திருடர்கள் கதை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவர்களின் கதையுடன் ஒத்தவர்களாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அலிபாபா எனலாம். அவருடன் சேர்ந்து மக்களின் வரி பணத்தை சுரண்டிய திருடர்கள், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு மகிந்த ராஜபக்சவை கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

ஏனெனில் 21ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் போது பிரதமர் அதிகாரம் கொண்டவராகக் காணப்படுவார்.

தற்போது பதவியிலிருக்கும் ரணில் விக்ரமசிங்கவிடம் அதிகாரம் சென்றால் ராஜபக்சக்களை பாதுகாப்பார். இல்லாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு ராஜபக்சவின் திருடர்கள் பிரதமராக மகிந்தவை அரியணையில் அமர்த்துவார்கள்.

மேற்குலகத்தின் செல்லப்பிராணியாகவும் ராஜபக்சக்களின் நண்பராகவும் காணப்படும் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் ராஜபக்சக்களைக் காட்டிக்கொடுக்க மாட்டார்.

நாடாளுமன்றம் திருட்டு கும்பல் வசமே இருக்கிறது: ஜேவிபி குற்றச்சாட்டு | Parliament Is In The Hands Of A Robbery Gang

இலங்கையில் சீனா, இந்தியாவின் ஆதிக்கம் 

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதார நெருக்கடியில் வாழும் இலங்கை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தார். ஆனால் அவர் உணவுப் பொதிகளை வழங்கி விட்டு கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே தருணம் எனக் கூறியிருப்பது தமிழகம் எமது தொப்புள் கொடி உறவுதானா என்ற கேள்வி நம்மிடத்தில் எழுப்புகிறது.

நமது நாட்டின் பொருளாதார பிரச்சினையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தியா தனது ஆதிக்கத்தை இலங்கையிலே மேற்கொண்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளங்களை இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுப் பெற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கையின் அரிதான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இருநாடுகளின் வசம் சென்றுள்ளது.

சீனாவிடம் நுரைச்சோலை கையளித்தபோது இந்தியாவிடம் சம்பூர் அனல் மின் நிலையத்தைக் கையளித்தார்கள். கொழும்பு போர்ட் சிட்டி துறைமுக பகுதிகளை சீனாவிற்கு அளித்தபோது திருகோணமலை துறைமுகம் அதனை சூழவுள்ள பகுதிகளை இந்தியாக்கு தாரை வார்த்தார்கள்.

அதிவேக நெடுஞ்சாலையைச் சீனாவுக்கு தாரை வார்த்த போது, யாழ்.தேவி புகையிரத பாதையை இந்தியாவுக்கு வழங்கினார்கள். இவ்வாறு இந்தியாவும் சீனாவும் இலங்கையின் வளங்களையும் வருமான மார்க்கங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

இந்தியா 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தால் உண்மையில் அவர்கள் தொப்புள் கொடி உறவுகள் தான். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US