ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல்: அனுர வெளியிட்டுள்ள கருத்து
ஆட்சியை இழக்கப் போவதாகக் கணிப்புகள் கூறப்படுவதால், இந்தத் தருணத்தில் ஒரு தேசியத் தேர்தலைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் ரொறன்ரோவில் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தும், உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களை தேசிய மக்கள் சக்தி அனுமதிக்காது.
தேர்தலில் தயக்கம்
அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் தேர்தலில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் இப்போது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் குறைந்த பட்சம் சில நாடாளுமன்ற ஆசனங்களையாவது பெற்றுக்கொள்ள முடியாது.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பசில் ராஜபக்சவும் அவரது குழுவினரும் தற்போது முயற்சித்து வருகிறது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |