பதவி விலகினார் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர்! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! - ஆரம்பமானது சபை அமர்வு (Live)
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாக முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களும் வீதிக்கு இறங்கி வரும் நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரியவருகிறது
நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாக பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கலந்துரையாடலின் போதே, இன்று காலை பத்து மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடாளுமன்றின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது! - அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
