பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது! - அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்
அரசாங்கம் இன்று (05) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அதே வேளையில் 113 ஆசனங்களின் தனிப்பெரும்பான்மையையும் இழக்க நேரிடலாம் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 50 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை இழக்க நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
