போஷாக்குப் பிரச்சினையில் மக்கள்! கொழுப்புப் பிரச்சினையில் எம்.பிக்கள்: செல்வராசா கஜேந்திரன்
மக்களுக்கும் சிறுவர்களுக்கும் தான் போஷாக்குப் பிரச்சினை, ஆனால் இங்குள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழுப்புப் பிரச்சினையில் உள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிள்ளைகள், தாய்மாரின் மந்த போசணை தொடர்பான விவாத்தின் போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
போஷாக்குப் பிரச்சினை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்பகுதியில் உள்ளவர்களை விடவும் போஷாக்கற்ற நிலைமை தொடர்பில் நாம் நன்கு அறிவோம். நாம் அதற்குள் வாழ்ந்தவர்கள். இதனால் இப்போதும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். இப்போது நீங்கள் இது தொடர்பில் பேசுவதில் மகிழ்ச்சி.

போஷாக்கற்ற நிலையால் மக்களும் சிறுவர்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இங்குள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழுப்புப் பிரச்சினை. இதனால் இவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
குருந்தூர் மலை

நாடாளுமன்றில், பலர் இங்கு இனவாதம் பேசுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஓர் இனவெறியர்.
இவர் விவாதத்துக்குரிய தலைப்பில் பேசாது குருந்தூர் மலை தொடர்பில் பேசும்போது மௌனிகளாக இருந்த சிலர், நான் இந்த விடயம் தொடர்பில் பேசும்போது விவாதத்தின் தலைப்புக்கு முரணாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.
குருந்தூர் மலை விடயத்தில் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். எமது உயிரைக் கொடுத்தாவது ஆக்கிரமிப்பைத் தடுப்போம் என தெரிவித்துள்ளார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam