கிளிநொச்சியில் ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் பாடசாலையில் ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (28.02.2024) காலை பாடசாலை ஆரம்பமாகும் நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது, பாடசாலையின் உரிய பாடங்களுக்கான ஆசிரிய பற்றாக்குறை, குடிநீர் வசதியின்மை, மசலக்கூட வசதியின்மை, மற்றும் தளபாட பற்றாக்குறை போன்றவற்றை நிவர்த்தி செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலய கல்வி திணைக்களத்தினால் உறுதி
மேலும், பாடசாலை நுழைவாயிலை மறித்து மாணவர்களை உள் நுழைய விடாத நிலையில் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நீடிக்கப்படும் என பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வலய கல்வி திணைக்களத்தின் அதிகாரிகளினால் இன்னும் "ஒரு மாத காலத்திற்குள் குறித்த கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்" என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பதாதைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |