பெற்றோர்கள் பிள்ளைகள் மீது கண்காணிப்பும் அக்கறையுடனும் செயற்படவேண்டும்: எம்.டி.ஆர்.கேரத்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறையுடனும் கண்காணிப்புடனும் செயற்படவேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.ஆர் கேரத் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகி வருகின்றமை பல்வேறு சம்பவங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் வெள்ளை வானில் பாடசாலை மாணவர்கள் கடத்தல் என்று சமூகத்தில் உண்மைக்குப் புறம்பான செய்தியினை பரப்பிய சம்பவம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள பெற்றோர்களுக்கான அறிவிப்பாக இதனை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட அது தொடர்பான விழிப்புணர்வினை பாடசாலைகள் தோறும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வணிக நிலையங்களில் 18 அகவைக்கு குறைவானவர்களுக்குப் புகைத்தல் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய எந்த பொருட்களையும் விற்பனை செய்யவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 16.03.2022 அன்று மாலைநேர வகுப்பிற்குச் சென்ற மாணவர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது.
புதுக்குடியிருப்பில் மாணவர்கள் பெற்றோருக்குப் பொய்சொல்லி விட்டு புதுமாத்தளன் கடற்கரைக்குச் சென்று அங்கு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவர்கள் தவறான செயற்பாட்டிற்குக் கொண்டு செல்பவர்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், பெற்றோர்கள் மாணவர்கள் தொடர்பில் அக்கறையுடனும், கண்காணிப்புடனும் செயற்படவேண்டும். பாடசாலை நேரம், அதன் பின்னர் மாலைநேர வகுப்பு, பின்னர் வீடு என மாணவர்கள் காணப்படுகின்றார்கள்.
இதில் வீட்டில் இருக்கும் பெற்றோர்களின் அக்கறையீனத்தினால் இறுதியில் பொலிஸ் நிலையமும், வைத்தியசாலையும், நீதிமன்றமும் என்று செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
எதிர்கால சிப்பிகளான மாணவர்களைச் சரியாக வழிநடத்துவது ஒவ்வொரு பெற்றோரின்
கடமையாகும். பிரதேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளாக
இருந்தாலும் ஆண்பிள்ளைகளாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளின் அக்கறைகொண்டு
செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
