அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி பச்சைக்கொடி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளின் சிறிலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில், இன்று (04.11.2024) உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயருக்கும் (Parameswaran Iyer) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் எதிர்காலத்திலும் அவ்வண்ணமே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம்
இதன்போது புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம், கிராமிய வறுமையை ஒழித்தலுக்கான திட்டங்கள், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்துக்கு இணையான டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்து இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள், வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக முகம்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan