இன்று முதல் நடைமுறைக்கு வரும் காகிதமில்லா சுங்க அறிவிப்பு முறை! முக்கிய அறிவுறுத்தல்
காகிதமில்லா சுங்க அறிவிப்பு முறை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முந்தைய முறையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அறிவிப்புகளை இன்று முதல் இலங்கை சுங்கத்துறை இனி ஏற்றுக்கொள்ளாது என இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா (Chandana Punchihewa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதார திட்டம்
அதன்படி, அனைத்து இறக்குமதியாளர்களும், அறிவிப்பாளர்களும் தங்களது சுங்க அறிவிப்புகளையும் பிற தொடர்புடைய ஆவணங்களையும் செல்லுபடியாகும் எண்ணிமக் கையொப்பம் (Digital Signature) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், எண்ணிமமயமாக்கல் மூலம் அரச சேவைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இந்த காகிதமில்லா சுங்க அறிவிப்பு முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இந்த முறையானது சுங்க அனுமதி செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.