சஹ்ரானை இயக்கிய அதி புத்திசாலி! பின்னணியில் கட்டுப்படுத்தக் கூடிய நபர் - வெளிவரும் தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கு இடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹாசிமை கட்டுப்படுத்திய மற்றுமொரு நபர் காணப்பட்டார். அந்த நபர் மிகவும் புத்திசாலி. இலங்கையில் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது.விடுதலைப்புலிகள் கூட அதனை செய்யவில்லை.
சஹ்ரான் ஹாசிம் முறையான கல்வியறிவற்ற ஒருவர் அவருக்கு அவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திறமையிருந்திருக்காது. அவருக்கு மேல் அவரை கட்டுப்படுத்தக்கூடிய யாரோ இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,