இலங்கையில் நடந்த வன்முறைகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த வெளியிட்ட அறிவிப்பு(Video)
நாட்டில் கடந்த சில நாட்களுக்க முன்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்குத் தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த அறிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam