நாட்டை சவப்பெட்டிக்குள் தள்ளிய அரசாங்கம்! இறுதி ஆணியை அடிப்பதற்கு ஆயத்தம் (Video)
நாட்டை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ள அரசாங்கம் கடைசி ஆணியை அடிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மறுபுறம் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டையும் மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான பாதைகளை துரிதமாகத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எதில் வெற்றியடைந்திருக்கின்றது? அடுப்பு எரிப்பதற்குப் பயன்படுத்துகின்ற விறகு இப்போது பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளையும் சுமந்து வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,