பாவனையை கட்டுப்படுத்துங்கள்! நாட்டு மக்களுக்கு மிகமுக்கிய அறிவுறுத்தல் (Video)
உங்களின் அன்றாட வாழக்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக நேற்றைய தினம் விசேடமாக உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த இரண்டு மாதங்களாக பொது மக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எரிபொருள் மின்சார பாவனையை கட்டுப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri

படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
