அபாய வலயமாக உருவெடுத்துள்ள யாழ்ப்பாணம்! மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை (VIDEO)
தீவிரமான டெங்குக் காய்ச்சல் அபாயமுள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ். மாவட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகிறது.
எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுள்ளோம்.
அத்துடன் பொது மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் 6 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் யாழ். மாவட்டமும் அடங்குவதாகவும் யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,



