இரு இராஜினாமா கடிதங்களை கையளித்த அலி சப்ரி: ஜனாதிபதி வழங்கிய உறுதி
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு கலகொட அத்தே ஞானசார தேரரை (Galagoda Aththe Gnanasara) நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தமது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rajapaksa) நேற்று முன் தினம் கையளித்த போதும், குறித்த செயலணியால் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உட்பட அனைத்து சட்டவாக்கச் செயற்பாடுகளையும் சுயாதீனமாக மேற்கொள்வதற்கு எவ்விதமான தடைகளும் விதிக்கப்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பித்தவுடன் நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது இரண்டு இராஜினாமாக் கடிதங்களையும் முதலில் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
என்ற போதும் குறித்த இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,