பாரிய பாதுகாப்பு ஆபத்தை எதிர்நோக்கி வரும் இலங்கை: வெளியாகியுள்ள தகவல்
இந்து சமுத்திரத்தில் அணுவாயுதப் போட்டி காரணமாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பாரிய பாதுகாப்பு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்திற்குள் அடிக்கடி அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரவேசிப்பது, அணுவாயுதப் போட்டி உச்சமடைந்திருப்பது, சில ஏகாதிபத்தியவாதிகள் குழுக்களாகப் பிரிந்து, சிறிய நாடுகளுக்கு சார்பான தீர்மானங்களை எடுக்குமாறு அழுத்தம் கொடுப்பது ஆகிய காரணங்களால், இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,