வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை - அம்பலப்படுத்தும் தேரர்
தாம் வடக்கிற்கு சென்ற போது 'எங்களுக்கு அரசியல்வாதிகள் வேண்டாம் என்றும், அங்கு இளைஞர் யுவதிகளுக்கு இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும்' அழுது கூறியதாக “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவர் ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara Thero) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயத்திற்கு சுமந்திரன் (M.A.Sumanthiran) போன்றோர் பொறுப்பு கூற வேண்டுமல்லவா? சுமந்திரன் போன்றோருக்கு அங்கு ஒரு புனர்வாழ்வு முகாமைக்கூட திறக்க முடியாது போயுள்ளது.
சுமந்திரனுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். முடிந்தால் மன்னாரில் இந்து அரச அதிபர் ஒருவரை நியமித்துக் காட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,