ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் அதாவுல்லாவின் கருத்தால் அமளிதுமளி
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) முஸ்லிம்களின் எதிரியென தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா (A.L.M.Athaullah) தெரிவித்த கருத்தினால் ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதாக அறியமுடிகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்தமை தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஞானசார தேரர் முஸ்லிம்களின் எதிரியெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri