டயகம சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? ஆதாரங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய டயகம சிறுமி ஹிஷாலினி தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த வாக்குமூலத்தையும் வழங்கவில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், வேறு ஒரு நபரே என்ன நடந்தது என வாக்குமூலம் வழங்கினார் என மருந்துவர்களே குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது நிபுணர்களின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
