மோசமடைந்து வரும் நெருக்கடி - இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஆசியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிபுணத்துவ மற்றும் மூலோபாய நிறுவனமான பவர் க்ரூப் ஏசியா (பி.ஜி.ஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் அண்மைக்கால நடைமுறைகளை மேற்கோள்காட்டி இந்த விடயத்தை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய வெளிநாட்டுப் படுகடன் தொகையை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளதால் வறுமையைத் தணிக்க போதியளவு இயலுமை இல்லையென அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மோசமடைந்து வரும் நெருக்கடிக்கு இலங்கை அரசாங்கமும், மத்திய வங்கியும் காத்திரமான நடவடிக்கை எடுக்காமல் குறுகிய கால கொள்கைகளைத் தொடரும் பட்சத்தில் இலங்கை நாணயத்தின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
