மோசமான நிலையை நோக்கி நகரும் இலங்கை - வேகமடையும் கோவிட்டால் புதிய திரிபுகள்
கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையில் கோவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவை விடவும் மோசமான நிலையொன்றை நோக்கி இலங்கை நகர்கின்றதாகவும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோவிட் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக புதிய திரிபுகள் உருவாகின்றதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்புசக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எனவே, இலங்கையில் பிரிட்டன் திரிபான பி.1.1.7 அல்பா திரிபு வேகமாக பரவுவதால் புதிய திரிபுகள் உருவாகுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,
