7ஆம் திகதிக்கு பின்னும் பயணத்தடையா? உத்தியயோகபூர்வ அறிவிப்பு தொடர்பில் இராணுவ தளபதி கூறியுள்ள விடயம்
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை 7ஆம் திகதியின் பின்னரும் நீடிப்பதற்கு இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
7ஆம் திகதியின் பின்னரும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும என்று வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
அவ்வாறு ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,