தீவிரமடையும் உருமாறிய கோவிட் பரவல் - விசேட வைத்திய நிபுணர் என்ற வகையில் சுதர்ஷனி தெரிவிக்கும் விடயம்
புதிய வைரஸ் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் நாட்டு மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை விசேட வைத்திய நிபுணர் என்ற வகையில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு செய்தால் வைரஸ் பரவலை எம்மால் கட்டுப்படுத்த முடியும். உருமாறிய கோவிட் வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது.
நாளொன்றில் 3500 தொற்றாளர்கள் இனங்காணப்படுவது மாத்திரமின்றி இதேபோன்று 3 மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri