இலங்கையில் ஆபத்தான 3 கோவிட் திரிபுகள் - தடுப்பூசிகளுக்கு பதிலளிக்காது என தகவல்
பிரிட்டன், தென்னாபிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்திய கோவிட் வைரஸ் திரிபுகள் மிக ஆபத்தானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோயெதிர்ப்புப் பிரிவின் பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்தியாவின் திரிபும், தென்னாபிரிக்காவின் திரிபும் பரவுமாக இருந்தால் தடுப்பூசிகளுக்கு அவை பதிலளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கோவிட் தொற்று பரவம் வேகம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பூசி வழங்கியவர்களுக்கும் தொற்று பரவும் தன்மையைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நான்கு வைரஸ்கள் அபாயகரமானவை எனப் பெயரிடப்பட்டுள்ளன.
அந்த அபாயகரமான வைரஸ்களுக்கு அப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட கோவிட் வைரஸ்கள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
