நாட்டின் 95 வீதமான பகுதிகள் சிவப்பு வலயங்கள்
கோவிட் தொற்று காரணமாக நாட்டின் 95 வீதமான பகுதிகள் சிவப்பு வலயங்களாக உருவெடுத்துள்ளதோடு இந்த ஆபத்து தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்பதால் எதிர்வரும் வாரத்திற்கும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்தது தொடக்கம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல்வேறு பரிந்துரைகளை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் வழங்கியுள்ளது.
இதனையடுத்தே, கோவிட் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam