கண் கலங்கிய பன்னீர்செல்வம் - ஆறுதல் கூறிய சசிகலா
மாரடைப்பால் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு சசிகலா நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகக் கடந்த 22ம் திகதி அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளார்.
இன்று காலை விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற வைத்தியர்கள் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள விஜயலட்சுமி உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri