பண்டோரா பேப்பர் சர்ச்சை! - அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணம் குறித்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் எவ்வாறு உள்ளன, அவர்கள் எவ்வாறு பணம் சம்பாதித்தனர் என்பதை லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையம் கண்டிப்பாக ஆராய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குத் தெரிந்தவரை, ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஓய்வுபெற்ற அரசியல்வாதியின் பெயர் இருந்தது, ஆனால் அவரைத் தவிர வேறு அரசியல்வாதிகளின் பெயரும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதைப் பற்றிப் பேசுவதை விட, அவர்கள் சொத்தை முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை உடனடியாகக் கண்டறிவது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
