வாய்த்தர்க்கம் முற்றியதால் ஏற்பட்ட விபரீதம் - கொலையில் முடிந்த அவலம்
கொழும்பு - பாணந்துறையில் நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை - வாழை சந்தைக்கு முன்பாக நேற்றையதினம்(24.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை - கெசல்வத்த கல்லுபர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மொஹமட் ஆஷிஸ் மொஹமட் அக்ரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் மோதலில் பலத்த காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.
முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்த அனுமதி பெறுவது தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையே பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |