வங்காள விரிகுடாவில் மூழ்கிய பாரிய சரக்குக் கப்பல்! மீட்புப் பணிகள் தீவிரம்
பனாமா நாட்டுக் கொடியுடனான ''ஓஷன் வின்னர்" சரக்குக் கப்பலொன்று வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் இந்த சரக்குக் கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணிகள்
இதன்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களுள் பெரும்பாலானவர்கள் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, குறித்த கப்பலில் 20 சீனர்கள், மூன்று மியான்மர் நாட்டினர் மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 24 பணியாளர்கள் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியக் கடற்படையினரும், கடலோரக் காவல்படையினரும் மீட்புப் பணியில் ஈடுட்டுள்ள நிலையில், இதுவரை 2 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.