வெளிநாட்டில் தலைமறைவான குடு சலிந்து பின்னணியில் செயற்பட்ட பெண் அதிரடியாக கைது
நாட்டை விட்டு தப்பிச்சென்ற, திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்ஷித குணரத்ன என்ற ‘பாணதுரே குடு சலிந்து’ என்ற போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருக்கோடை, ருக்காஹா வீதியில் உள்ள ஒரு வீட்டில், ரூ.1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக ஹிரான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் 50 கிராம் ஐஸ் போதைப்பொருட்களை பொதி செய்யப்பயன்படுத்தப்படும் சிறிய மெழுகுப் பைகள், ஒரு மின்னணு தராசு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் மற்றும் கடத்தலில் இருந்து சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ.36,500 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

புலனாய்வு அதிகாரிகள் விசாரணை
இரண்டு மாதங்களுக்கு முன்பு அருக்கோடை, ருக்காஹா வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த குறித்த பெண் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது, வீடு சோதனை செய்யப்பட்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri