அதிரும் காசா எல்லைப்பகுதி: போருக்கு பின்னரான புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரேல்
இஸ்ரேல் மீது காசா நடத்திய முதல்நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் ஏற்பட்ட சேதங்கள், போருக்கு முன் போருக்குப் பின் என இரு படங்களாக இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
போருக்கு முன்பு (அக்டோபர் - 6) இருப்பதை விட, காசா தாக்குதல் நடத்திய அக்டோபர் 7ஆம் திகதி மிகுந்த சேதங்களை இஸ்ரேல் சந்தித்துள்ளது.
இப்படங்கள் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டவை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
The lengths Hamas is willing to go in order to commit war crimes are visible even from outer space. pic.twitter.com/7c3oLeUeVQ
— Israel Defense Forces (@IDF) October 16, 2023
மருந்துகளுக்கான தட்டுப்பாடு
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் காசா பகுதியில் வசிக்கும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீன தரப்புக்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும். 10,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காசா மருத்துவமனைகளில் ஏற்கனவே சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், காயமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்கு மிகவும் சிக்கலான ஒரு சூழல் உருவாகியுள்ளது.
105 பேர் பலி
மேலும், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 103 பேர் மாயமாகியுள்ளனர் என்றும், இது ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
