உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ரோவிற்கு தகவல்களை வழங்கிய புலஸ்தினி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனத்திற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு சென்றமை குறித்து தாக்குதல்கள குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் எதனையும் தெரிவிக்கவில்லை.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் ரோவிற்கு முன்கூட்டியே தகவல்களை புலஸ்தினி வழங்கினார் என தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் சுதந்திரக்கட்சி கூறியுள்ளது.
தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் போது சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது புலஸ்தினி அங்கிருந்து தப்பி, அதன் பின்னர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றதாக சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
