யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த ஆலயத்திற்கு நேர்ந்த கதி!வெளிவரும் உண்மைகள்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Theepan Mar 29, 2023 09:17 PM GMT
Report

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன என ஆலய பரிபாலன சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் இன்று (29.03.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

 பூஜை வழிபாடுகள்

1846 ஆம் ஆண்டு அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் தொடக்கம் உச்சவ காலங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

பின்னர்1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது கிராமத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது கிராம மக்கள் வெளியேறி யாழ்குடா நாட்டில் உள்ள பல பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.

வாழ்ந்து வரும் காலத்தில் 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரனாலும் எமது கிராம மக்களின் முயற்சியினாலும் இந்த ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் இந்த ஆலயத்துக்கு சென்று வந்த போதும் நல்ல நிலையிலே ஆலயம் இருந்தது. ஆலய விக்கிரமங்களும் இருந்தன.

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த ஆலயத்திற்கு நேர்ந்த கதி!வெளிவரும் உண்மைகள் | Palaly Rajarajeshwari Temple Sri Lanka Tamils

முருகன் விக்கிரகம் 

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்ற போது விக்கிரகங்கள் எல்லாம் நல்ல நிலையிலே இருந்ததன. தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றோம் அப்படி இருக்கின்ற போது இப்பொழுது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி திருவெம்பாவை தினத்திற்கு சென்ற பொழுது முருகன் சிலை காணாமல் போயிருந்தது.

தற்போது முருகன் விக்கிரகம் காணாமல் போயுள்ளன. வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது என நிர்வாக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

24 மணி ஆளங்களும் ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் இராணுவம் ஈடுபட்டிருக்கின்ற போது நாம் பூஜை வழிபாடுகளுக்கு செல்வதற்கு கூட இராணுவத்தின் அனுமதியினை பெற்று செல்கிறோம் இவ்வாறு நிலைமை இருக்கின்ற பொழுது குறித்த விக்கிரகங்கள் படிப்படியாக காணாமல் போனமைக்கான பிரதான காரணம் என்ன இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார். 

இதற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் தான் சந்தேகப்பதாக ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக பௌத்தமயமாக்கலின் அங்கமாக இடம்பெறும் கச்சதீவில் பௌத்த ஆதிக்கத்தினை மேற்கொண்டமை வெடுக்குநாறிமலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலையினை உடைத்தெறிந்தமை உள்ளிட்ட செயல்களின் தொடர்ச்சியாகவே பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்களும் சூறையாடப்பட்டுள்ளனவா என சந்தேகம் எழுகின்றது‘‘ என்றார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US