இலங்கையில் சிங்கள மக்களால் ஏற்பட்டுள்ள மாறுதல் நிலைமை! பழ. நெடுமாறன்
இலங்கையில் உள்நாட்டு ரீதியாக பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
விசேட செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எந்த ராஜபக்சவை வெற்றி வீரர் என்று கொண்டாடி ஆட்சி பீடத்தில் அமர வைத்தார்களோ அதே சிங்கள மக்கள் ராஜபக்சர்களை பதவியில் இருந்து விரட்டியடித்திருக்கிறார்கள்.
இன்னமும் அவர்களுக்கு எதிரான போராட்டம் மக்களால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வு அந்த மக்களுக்கு ஏற்பட்டதின் விளைவு தான் அது.
பொருளாதார நெருக்கடியால் மட்டும் இது ஏற்பட்டு விடவில்லை. 2009இற்கு முன்பு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்த போது உலக நாடுகளில் உல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது.
அந்த சூழ்நிலையை சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் சுதந்திர போராட்ட இயக்கம் என்பதை மறைத்து பயங்கரவாத இயக்கம் என சித்தரிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.




