இலங்கையை கோபப்படுத்திய பாகிஸ்தானின் செயல்
பாகிஸ்தானில் உள்ள பல பௌத்த பாரம்பரிய இடங்கள் அழிக்கப்படுவது இலங்கையைக் கோபப்படுத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் சிற்பங்கள், ஸ்தூபிகள் மற்றும் புத்தரின் சிலைகள், இடிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைக்கப்படும் டயமர் பாஷா அணியின் காரணமாகவே அங்கிருந்த 30,000 மூலச் சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச் சேவை தெரிவிக்கிறது.
2020 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் ஒரு சில பாகிஸ்தானியர்களால் 1,700 ஆண்டுகள் பழமையான சிலை இடிக்கப்பட்டது.
இந்த சிலை இடிக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri