இலங்கையிலிருந்து பாகிஸ்தானிய சிறைக் கைதிகள் பரிமாற்றம்
இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறைக்கைதிகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் குறித்த கைதிகளை சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் கையளித்துள்ளனர்.
சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்
குறித்த சிறைக் கைதிகளை தமது நாட்டின் சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
