போட்டியின் இடையில் நாடு திரும்பிய பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தலைவி
தமது தந்தை காலமானதை அடுத்து பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை வீராங்கனை பாத்திமா சனா துபாயிலிருந்து கராச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், பாத்திமா சனாவின் தந்தையின் மரணம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தந்தையின் மரணம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிர் 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில், சனா, பாகிஸ்தான் அணியின் தலைவியாக இருந்து வருகின்றார்.

தனது 22 வயதில் அணிக்கு தலைமை தாங்கும் அவர், அந்த நாட்டு மகளிர் அணிக்கு தலைமை தாங்கும் முதலாவது இளம் தலைவியாக கருதப்படுகிறார்.
மேலும், இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவரின் தலைமைத்துவத்தின் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டதுடன் இந்தநிலையில், கடந்த இரண்டு போட்டிகளில், அவர் 43 ஓட்டங்கள் மற்றும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri