இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான்
இந்தியாவின் கோழைத்தனமான தாக்குதலுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசாத் காஷ்மீர் பிரதேசங்களின் ஒன்பது இலக்குகள் மீது சற்று முன்னர் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர், மிக விரைவில் உரிய முறையில் தெரிவு செய்யப்படும் இலக்குகள் மீது பாகிஸ்தான் பதிலடித் தாக்குதலை தொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
வெடிப்புச் சத்தங்கள்
அத்துடன், இந்தியாவின் தாக்குதல் மிகவும் கோழைத்தனமான தாக்குதல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானிய போர் விமானங்கள் அனைத்தும் தற்போது வான் வெளியில் பறந்து நிலைமையை அவதானித்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன், இந்தியாவுடனான பாகிஸ்தானின் எல்லைப்பிரதேசத்தில் பாரிய ஷெல் தாக்குதல்கள் மற்றும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 37 நிமிடங்கள் முன்

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
