இங்கிலாந்தை தமது மண்ணில் வைத்து தோற்கடித்த பாகிஸ்தான் அணி
சுற்றுலா இங்கிலாந்து (England) அணிக்கும் பாகிஸ்தான் (Pakistan) அணிக்கும் இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் அந்த அணி, இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
9 விக்கெட்டுக்களால் வெற்றி
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 267 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் 344 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் அணி, ஓரு விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களை பெற்று போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 16 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan