அவுஸ்திரேலியாவுக்கான இந்திய அணியில் நீக்கப்பட்ட முக்கிய வீரர்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
அதேபோல சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
குல்தீப் யாதவ் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற முதல் டெஸ்ட்டில் விளையாடினார்.
உடற் தகுதி பெறாத மொஹமட் சமி
ஆனால், திடீரென ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். குல்தீப் யாதவுக்கு பதில் வோசிங்டன் சுந்தர் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்று இருக்கிறார்.
இதில் குல்திப் யாதவுக்கு ஏற்பட்டுள்ள உபாதையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை காரணம் காட்டியுள்ளது.
எனினும் மொஹமட் சமி நீக்கப்பட்டமைக்கான காரணத்தை சபை அறிவிக்கவில்லை அவர் தனது முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
எனவே, முழு உடற் தகுதி பெறாத மொஹமட் சமியை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்ற நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவரை தேர்வு செய்யவில்லை.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை
அதே சமயம் அவுஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதால் இந்திய அணியில் ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் உதிரி வீரர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பும்ரா, முகமது சிராஜ், ஆகாஸ் தீப், பிரசித் கிருஸ்ணா, ஹர்சித் ரானா, நிதிஸ் குமார் ரெட்டி ஆகிய ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் 18 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கின்றனர்.
முகேஸ் குமார் நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகிய மூவரும் உதிரி வீரர்களாக அணியில் இடம்பெற்று இருக்கின்றனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |