ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!
போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (08) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான பிஎஸ்எல் போட்டி, மைதானத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இதற்கு முன்னர் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீதமுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) மாற்ற முடிவு செய்திருந்தது.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்றையதினம் (10) ஐபிஎல் 2025 தொடரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள போட்டிகளுக்கான திகதிகள் மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |