பாகிஸ்தானின் இடைவிடாத இராஜதந்திர முயற்சி: ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள்
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீவிர இராஜதந்திர முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சந்திப்புகள் இராஜதந்திர ரீதியாகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு களமாகப் பார்க்கப்படுகின்றன.
இது ஒரு முத்தரப்பு சந்திப்பு அல்ல என்றும், வெள்ளை மாளிகை கூறுவது போல் அமெரிக்கர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர நகர்வுகள்
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் முற்றுகை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ள நிலையில், அமெரிக்கா இதுவரை அதற்கு எவ்வித சாதகமான சமிக்ஞைகளையும் காட்டவில்லை.

பாகிஸ்தானின் இந்த இடைவிடாத 'ஷட்டில் டிப்ளமசி' (Shuttle Diplomacy) காரணமாக திரைக்குப் பின்னால் இராஜதந்திர நகர்வுகள் வெற்றி பெற்று வருவதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
முக்கியமான ஆலோசனைகள்
கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தான், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

ஈரான் வெளி விவகார அமைச்சர் தனது பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக ரஷ்யாவிற்குச் செல்லவுள்ளார்.
இத்தகைய தொடர்ச்சியான சந்திப்புகள் ஈரான் - அமெரிக்கா இடையிலான முட்டுக்கட்டையை உடைத்து, அமைதியை நிலைநாட்ட உதவும் என சர்வதேச இராஜதந்திரிகள் எதிர்பார்க்கின்றனர்.